This Article is From Sep 19, 2018

“இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள்“ – ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

நாட்டை ஆளும் பாஜகவின் கொள்கை வழிகாட்டியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயல்பட்டு வருகிறது

இந்துத்வா என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது என்று மோகன் பகவத் நேற்று பேசியிருந்தார்.

New Delhi:

இந்தியாவில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது-

“இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் இந்துக்கள். இவ்வாறு சொல்வதற்கு அவர்கள் தயங்குகிறார்கள். எல்லோரும் நம்முடைய மக்கள். ஒற்றுமையாக இருப்பதுதான் நம்முடைய கலாச்சாரம். இந்தியாவில் வாழும் அனைவரும் அடையாளத்தாலும், தேசத்தாலும் இந்துக்கள். இந்துத்வா நம்மை ஒன்றுபடுத்துகிறது. மற்றவரை எதிர்ப்பதும், தரம் தாழ்த்துவதும் இந்துத்வா அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

நாட்டை ஆளும் பாஜகவின் கொள்கை வழிகாட்டியாக ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது. டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாளின்போது பேசிய மோகன் பகவத், நாட்டின் விடுதலைக்கு காங்கிரஸ் பாடுபட்டதாக பேசி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். 2-வது நாளான நேற்று பேசிய அவர், இந்துத்வா என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது. நாம் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதற்குப் பெயர் இந்துத்வா அல்ல என்று பேசினார்.

.