13 பேருடன் மாயமான போர் விமானத்தின் பாகங்கள் அருணாச்சலில் மீட்பு!!

விமானம் ஜூன் 3-ம்தேதி மாயமானது. அதில் 13 பேர் இருந்தனர். அவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விமானப்படை தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
13 பேருடன் மாயமான போர் விமானத்தின் பாகங்கள் அருணாச்சலில் மீட்பு!!

தரை வெளியில் இந்திய ராணுவம், கப்பல்படை, இந்தோ திபெத் துணை ராணுவப்படை உள்ளிட்டவை மாயமான விமானத்தில் உள்ள வீரர்களை தேடி வருகின்றனர்.

New Delhi: 

13 பேருடன் மாயமான ஏ.என். -32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாசல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விமானம் கடந்த ஜூன் 3-ம்தேதி மாயமாகி இருந்தது. 

அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தின் பயும் சர்க்கிள் பகுதியில் உடைந்த சிதிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் ஈடுபட்டிருந்தன. எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏ.என். 32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

விமானம் ஜூன் 3-ம்தேதி மாயமானது. அதில் 13 பேர் இருந்தனர். அவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விமானப்படை தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

இந்த தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படையின் சி -130 ஜே, சுகோய் சு - 30 பேர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரோவின் செயற்கைகோள்களும், ஆளில்லா உளவு விமானங்களும் தேடுதல் பணியை மேற்கொள்கின்றன. 

தரை வெளியில் இந்திய ராணுவம், கப்பல்படை, இந்தோ திபெத் துணை ராணுவப்படை உள்ளிட்டவை மாயமான விமானத்தில் உள்ள வீரர்களை தேடி வருகின்றனர். 

அசாம் மாநிலத்தின் ஜோர்கத் என்ற இடத்திலிருந்து, அருணாசல பிரதேசத்தின் மெச்சுகா என்ற இடத்தை நோக்கி விமானம் சென்று கொண்டிருந்தபோது ரேடாரின் கண்காணிப்பில் இருந்து விமானம் விலகியது.  சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................