விஷப்பாம்பை வெறும் கையால் பிடிக்கும் குஜராத் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்!

கடுமையான விஷம் நிறைந்த அந்த பாம்பை பரேஷ் தனானி, கையாளும் வீடியோவை இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்

விஷப்பாம்பை வெறும் கையால் பிடிக்கும் குஜராத் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்!
Ahmedabad:

குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி, தனது வீட்டுத் தோட்டத்தில் புகுந்த விஷப்பாம்பை வெறும் கையால் பிடிக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

குஜராத் மாநில சட்டசபை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானி. இவர் குஜராத்தில் காந்திநகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் தனது முகநூல் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோவை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில், தனது வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை வாலை பிடித்து லாவகமாக கையில் தூக்கி பிடித்தபடி இருந்த அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Newsbeep

அந்த வீடியோவில், இந்த கண்ணாடி விரியன் பாம்பு வழி தவறி என் வீட்டிற்குள் வந்துவிட்டது. ஆனால், எனக்கு பாம்பை எப்படி பிடிப்பது எனத் தெரியும் என்று குஜராத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான விஷம் நிறைந்த அந்த பாம்பை பரேஷ் தனானி, கையாளும் வீடியோவை இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

மேலும், அந்த பாம்பு பத்திரமாக காட்டுப்பகுதியில் விடப்பட்டதாக பரேஷ் தனானியின் ஊடகத் தொடர்பாளர் ஹரேஷ் சிஷாரா தெரிவித்துள்ளார்.

Click for more trending news