மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2பேர் ராஜினாமா!

குஜராத்தில் 34 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்  ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். இந்த நிலையில் காங்கிரஸ்  கட்சி எம்எல்ஏக்கள் ஜிது சவுத்ரி,  அக்சய் படேல் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். 

மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நெருங்கும்  நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2பேர் ராஜினாமா!

காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளளது.

ஹைலைட்ஸ்

  • 34 எம்எல்ஏக்கள் இருந்தால் ஒரு மாநிலங்களவை எம்பியை தேர்வு செய்யலாம்
  • 2 எம்.பி.க்களை பாஜக எளிதாக தேர்வு செய்து விடும்
  • எம்எல்ஏக்கள் ராஜினாமாவுக்கு பாஜகவே காரணம் என காங். குற்றச்சாட்டு
New Delhi:

மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் குஜராத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.  இது  எம்.பி.க்களை தேர்வு செய்வதில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் சட்டமன்றத்தில் மொத்தம் 182 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 103 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். தற்போது அங்கு 4 மாநிலங்களவை  எம்.பி. பதவி காலியாகிறது.  இவற்றில் 2 எம்.பி.க்களை பாஜகவால் எளிதாக தேர்வு செய்ய முடியும். 

இந்த நிலையில் அடுத்தகட்டமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நர்ஹாரி அமீனை, பாஜக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக  களத்தில் இறக்கியுள்ளது.

குஜராத்தில் 34 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்  ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய முடியும். இந்த நிலையில் காங்கிரஸ்  கட்சி எம்எல்ஏக்கள் ஜிது சவுத்ரி,  அக்சய் படேல் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். 

இதனால்,  காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 66 ஆக குறைந்துள்ளது. எனவே, காங்கிரசால் ஒரேயொரு  உறுப்பினரை மட்டுமே தேர்வு  செய்ய முடியும். இரு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார். 

Newsbeep

குஜராத்தில் பாஜக தரப்பில் 3, காங்கிரஸ் தரப்பில் ஒன்று என மொத்தம் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாகின்றன. இதையொட்டி, பாஜக அபே பரத்வாஜ் மற்றும்ரமிலாபென் பாரா  ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் சக்திசிங் கோகில், பரத்சிங் சோலங்கி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தங்களது எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததற்கு பாஜக செய்த சதியே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள்  குஜராத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  ஜூன் 19-ம்தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறவுள்ளது.