This Article is From Feb 19, 2020

சர்வதேச நிதியத்தின் புதிய பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிய பாகிஸ்தான்!!

பாரீஸை மையமாகக் கொண்டு செயல்படும் FATF அமைப்பு கருப்பு பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்த்தால், அந்நாட்டின் நிதியை முடக்க இயலும்.

சர்வதேச நிதியத்தின் புதிய பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிய பாகிஸ்தான்!!

சர்வதேச நிதியமான IMF சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

FATF எனப்படும் நிதி விவகாரங்களுக்கான சர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடையிலிருந்து பாகிஸ்தான் தப்பியுள்ளது. தன்சீம் அமைப்புக்கு எதிராக மேற்கொண்ட தீவிரவாத தடுப்பு நடவடிக்கையைக் காரணம் காட்டி, பாகிஸ்தான் பொருளாதாரத் தடையிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளது. 

தற்போது FATF - ன் சாம்பல் நிற பட்டியலில் (Grey List)-ல் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக அந்நாடு நடவடிக்கை எடுக்காமலிருந்து வருவதைக் காரணம் காட்டி, கருப்பு பட்டியலில் FATF சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்ட வசமாக அந்நாடு சாம்பல் நிற பட்டியலில் நீடிக்கிறது. 

இந்த தகவலை IMF எனப்படும் சர்வதேச நிதியம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

FATF அமைப்பின் 39 உறுப்பினர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். குறிப்பாகப் பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்குச் சர்வதேச நிதியம் நிதி உதவி வழங்குவது தொடர்பாகக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில் பாகிஸ்தானுக்குத் துருக்கி மற்றும் மலேசியா ஆகியவை ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையே தன்சீம் அமைப்பு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைப் பாகிஸ்தான் சுட்டிக் காட்டியிருந்தது. 

இதன் அடிப்படையில் FATF அமைப்பு பாகிஸ்தானைச் சாம்பல் பட்டியலில் நீடிக்கச் செய்துள்ளது. முன்னதாக பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்கும் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் கடந்த ஏப்ரலில் நீக்கப்பட்டது.

இதன்பின்னர் கடந்த அக்டோபர் மாத்தின்போது, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் உதவி செய்ததைச் சுட்டிக்காட்டி அந்நாட்டை மீண்டும் சாம்பல் பட்டியலில் FATF கொண்டு வந்தது.

கடந்த ஏப்ரலில் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்படாமல் இருந்தால், அந்நாடு தற்போது கருப்பு பட்டியலில் இடம்பெற்று, கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும். 

.