This Article is From Jul 26, 2018

இந்தியா 1 அடி எடுத்து வைத்தால், பாக்., 2 அடி எடுத்து வைக்கும்-இம்ரான் கான்

பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது

Islamabad:

பாகிஸ்தானில் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலின் முடிவுகளில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரிக் - இ- இன்சாஃப் கட்சி முன்னிலை வகிக்கிறது. " பாகிஸ்தானுக்கு நான் செய்ய நினைத்த கனவுகளை, செய்ய இது சரியான வாய்ப்பு. கடவுளுக்கு நன்றி" என்று இம்ரான் கூறினார். 272 இடங்களில் 70 இடங்களில், பி.டி.ஐ வெற்றி பெற்றுள்ளது. மேலும் 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 137 இடங்கள் தேவை. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 43 சீட்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது 

10 ஃபேக்ட்ஸ்,

தேர்தல் முடிவுகள் முழுமையாக வராத நிலையில் பி.டி.ஐ கட்சித் தொண்டர்கள் கொண்ட்டாட்டத்தில் இறங்கினர்.

இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, 5 கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சில தொழில் நுட்பக் கோளாறுகளால் வாக்கு எண்ணிக்கையும் தாமதமானது.

பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் செயலாளர் பாபர் யாகூப், ‘வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகத்தான். இதில் எந்த குளறுபடிகளும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி அமைப்பதன் மூலமே தற்போது ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

வாக்குச்சாவடிகளில் இருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ராணுவ வீரர்களால் அப்புறப்படுத்தப்பட்டனர் என்று செய்திகள் வெளியானவுடன், பிஎம்எல்-என் கட்சியின் தற்போதைய தலைமை நிர்வாகியும் நவாஸ் ஷெரிஃபின் சகோதரருமான ஷேபாஸ், ‘வாக்கு எண்ணிக்கை சட்டப்படி நடக்கவில்லை’ என்றுள்ளார்.

அவர் மேலும், ‘இந்தத் தேர்தல் முடிவுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். பாகிஸ்தானின் ஜனநாயகத்துக்கு இது மிகப் பெரும் இழக்கு’ என்றுள்ளார்.

தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னரே, அதில் ராணுவத்தின் தலையீடு இருக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டு வந்தது. மேலும், தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டனர். அதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது.

பாகிஸ்தான் தேசிய சபையில் 577 இடங்கள் உள்ளன. அவற்றில் 342 இடங்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மீதம் உள்ள இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த பிரிவினரின் எண்ணிக்கையை பொறுத்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 460 வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் நேற்று கட்டாவில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு வெளியே தன் உடம்பில் இருந்த குண்டை வெடிக்க வைத்தார். இதில் 31 பேர் இறந்தனர். 

.