This Article is From Oct 09, 2019

பஞ்சாபுக்குள் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம்! தேடுதல் வேட்டை தீவிரம்!!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் பஞ்சாபுக்கு வந்து சென்றிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 

பஞ்சாபுக்குள் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம்! தேடுதல் வேட்டை தீவிரம்!!

எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Chandigarh:

பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் ஒன்று  பஞ்சாப் எல்லைக்குள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனை தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. வந்திருந்த ஆளில்லா உளவு விமானம் என்பது அதிக எடையைக் கொண்ட பிரிவைச் சேர்ந்ததாகவும். 

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், 'பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உசைனி வாலா பகுதியில் ஆளில்லா ட்ரோன் விமானத்தை வீரர்கள் பார்த்துள்ளனர். இந்த விமானம் பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்ததாகும். இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையும், பஞ்சாப் போலீசும் அலெர்ட் செய்யப்பட்டது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா உளவு விமானம் பஞ்சாப் பகுதியில், ஏ.கே. 47 ரக துப்பாக்கிள், 8 சாட்டிலைட் போன்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை கீழ விழச் செய்து விட்டு சென்றதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்திருந்தனர். 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் பஞ்சாபுக்கு வந்து சென்றிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 
 
.