This Article is From Mar 21, 2019

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : ராணுவ வீரர் உயிரிழப்பு

இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 110 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் : ராணுவ வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் யஷ் பால் என்ற வீர்ர் உயிரிழந்தார்.

ஹைலைட்ஸ்

  • 24 வயதான யஷ்பால் என்ற வீரர் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தார்.
  • 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது
  • ஜனவரியில் இருந்து மட்டும் 110 முறை பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது.
Srinagar:

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார். ரஜவ்ரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரைக்கும் 110 பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் வீர்ர்கள் குண்டுமழை பொழிந்ததில் இந்திய ராணுவத்தை சேர்ந்த யஷ் பால் என்ற வீர்ர் உயிரிழந்தார்.

கடந்த திங்களன்று இரவு பாகிஸ்தான் ராணுவம் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறுவதால் இந்திய எல்லையில் உள்ள கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14-ம்தேதி புல்வாமா தாக்குதல் நடந்தது. இதில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பிப்ரவரி 26-ம்தேதி பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதன்பின்னர் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 2,936 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளது. இந்தியாவும் – பாகிஸ்தானும் கடந்த 2003-ல் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டன. இதன்படி இருநாடுகளும் அத்துமீறி தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், சிறு பிரச்னைகள் ஏற்படும்போது கொடி அமர்வு கூட்டத்தில் அதுகுறித்து தீர்வு காண வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

.