This Article is From Jun 16, 2018

மலாலாவை சுட உத்தரவிட்ட தாலிபான் தலைவர் கொல்லப்பட்டார்

மலாலா யூசுஃப்ஸாய், சுடப்பட்ட போது, பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி செயல்பாடுகளுக்கு பொருப்பாளராக இருந்தது மவுலானா

மலாலாவை சுட உத்தரவிட்ட தாலிபான் தலைவர் கொல்லப்பட்டார்

Maulana Fazlullah was also known as Radio Mullah or Maulana Radio.

ஹைலைட்ஸ்

  • 2009-ம் ஆண்டு முதல் மவுலானா தலைமறைவாக இருந்தார்
  • மலாலாவை சுட உத்தரவிட்டது மவுலானா
  • மவுலானா பற்றி துப்பு கொடுத்தால் 5மில்லியன் டாலர் பரிசு அறிவிக்கப்பட்டது.
Washington/Islamabad: ​​தாலிபான் தீவிரவாத அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் மவுலானா ஃபஸுல்லா, அமெரிக்க படையினரின் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஆஃப்கானிஸ்தானின் குனார் பகுதியில் அவர் கொல்லபட்டார் என ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

2012-ம் ஆண்டு, பெண்களுக்கான கல்வி உரிமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வந்த மாணவி மலாலா யூசுஃப்ஸாய், சுடப்பட்ட போது, பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதி செயல்பாடுகளுக்கு பொருப்பாளராக இருந்தது மவுலானா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மவுலானா தேடப்படும் சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்து, அவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 5 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையும் அறிவித்தது. 2009-ம் ஆண்டு முதல் மவுலானா தலைமறைவாக இருந்து வந்தார்.

பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் எல்லையின் தாலிபானின் முக்கிய புள்ளி ஒருவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆஃப்கானிஸ்தானுக்கான அமெரிக்கப் படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால் அவர் யார் என்று அவர் குறிப்பிடவில்லை.

ஆனால், ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் மவுலானா கொல்லப்பட்டதை உறுதி செய்தார். ஆனால், தாலிபான் அமைப்பு மவுலான இறந்ததை உறுதி செய்யவில்லை.

2013-ம் ஆண்டு தொடங்கி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல் பலவற்றுக்கு மவுலான சதித்திட்டம் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

2010 மற்றும் 2014-ம் ஆண்டு மவுலான கொல்லப்பட்டதாக, தகவல் வந்தது. ஆனால் பின்னர், போலியான தகவல் என தெரிய்வந்தது குறிப்பிடத்தக்கது.

.