This Article is From Jun 20, 2019

“இப்படி தப்பு பண்ணிட்டாரே…”- கேலிக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

அவரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் அசார் அப்பாஸ், “பிரதமரே, இது தாகூரின் வரிகள் என்று நினைக்கிறேன்” என்று கருத்திட்டார். 

“இப்படி தப்பு பண்ணிட்டாரே…”- கேலிக்கு உள்ளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

மற்றொருவரோ, “கான் சார், இது தாகூரின் வரிகள். உங்களுக்கு பயின்ற ஊடகப் பிரிவு தேவை” என்று கேலி செய்தார். 

Islamabad:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார். இம்ரான் கான், தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ரவீந்திரநாத் தாகூர் சொன்ன கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ஆனால், அதைச் சொன்னது மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளரான கலீல் ஜிப்ரான் என்று கூறியிருந்தார். இதுதான் அவரை கேலி செய்ய காரணமாக அமைந்துவிட்டது. 

இம்ரான் கான், “வாழ்க்கை என்பது முழுவதும் மகிழ்ச்சிகளால் நிரம்பியது என்று கனவு கண்டேன். ஆனால் கண் விழித்துப் பார்த்தால் வாழ்க்கை என்பது சேவை எனப் புரிந்தது. சேவை செய்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாயிற்று” என்ற பொன் மொழிகளை பதிவிட்ட இம்ரான், “ஜிப்ரானின் இந்த வரிகளைப் புரிந்து கொண்டால், வாழ்க்கையை முழுவதுமாக வாழ முடியும்” என்றும் கூறியிருந்தார். 

ஆனால் இந்த பொன் மொழிகளுக்குச் சொந்தக்காரர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

அவரின் இந்தப் பதிவைத் தொடர்ந்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் அசார் அப்பாஸ், “பிரதமரே, இது தாகூரின் வரிகள் என்று நினைக்கிறேன்” என்று கருத்திட்டார். 

இன்னொருவர், “இவர் உண்மையிலேயே பிரதமர்தானா. ஒரு பதிவைப் போடுவதற்கு முன்னர் அது யாருடையது என்று கூட பார்க்கமாட்டாரா” என்று கேட்டிருந்தார். 

மனோஜ் அகர்வால் என்பவர், “நல்ல வரிகள்தான். ஆனால், இதை எழுதியது ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூர்” என்றார்.

மற்றொருவரோ, “கான் சார், இது தாகூரின் வரிகள். உங்களுக்கு பயின்ற ஊடகப் பிரிவு தேவை” என்று கேலி செய்தார். 

.