‘பாட்ஷா’ டயலாக் பேசி எதிரிகளுக்கு பன்ச் கொடுத்த ஓ.பி.எஸ்..!

பன்னீர்செல்வத்தின் இந்த அதிரடி பேச்சால், இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘பாட்ஷா’ டயலாக் பேசி எதிரிகளுக்கு பன்ச் கொடுத்த ஓ.பி.எஸ்..!

அதிமுக சார்பில், சென்னையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதாக இருந்தது.


தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில், ‘பாட்ஷா' திரைப்பட டயலாக் பேசி, தனது அரசியல் எதிரிகளுக்கு பன்ச் கொடுத்துள்ளார்.

அதிமுக சார்பில், சென்னையில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு பதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 

“நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். ஆனால், கைவிடமாட்டான். நம்மை ஆண்டவனும் கைவிடவில்லை. இஸ்லாமிய பெருமக்களும் கைவிடவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கிறார்கள். ஆகவேதான் இடைத் தேர்தலில் நமக்கு வெற்றி கிட்டியது.

கேட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனால், கைவிட்டுவிடுவான். அப்படித்தான் சிலருக்கு தேர்தலில் நிறைய வெற்றி கொடுத்தது போல கொடுத்துள்ளான் ஆண்டவன். ஆனால், அவர்களால் அந்த வெற்றி குறித்து சிரிக்கக் கூட முடியவில்லை” என சூசகமாக பேசினார் ஓ.பி.எஸ்.

bஇந்த நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................