This Article is From Dec 19, 2018

பிளவுப்பட்ட கூட்டணியை தான் எதிர்கட்சிகள் அமைத்துள்ளன: தமிழிசை

பிளவுப்பட்ட கூட்டணியை தான் எதிர்கட்சிகள் அமைத்துள்ளன என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பிளவுப்பட்ட கூட்டணியை தான் எதிர்கட்சிகள் அமைத்துள்ளன: தமிழிசை

பிளவுப்பட்ட கூட்டணியை தான் எதிர்கட்சிகள் அமைத்துள்ளன என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலிலேயே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் கூட்டணியில் பிளவு ஏற்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதை அவர் சுட்டிகாட்டினார்.

மேலும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை, ஒரு கூட்டணி கட்சிகள் கூட ஏற்கவில்லை. முதலிலேயே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்றால், கூட்டணி அமைந்த பின்னர் அவர்கள் எப்படி முடிவு செய்வார்கள் இதனை மக்கள் நன்றாக யோசிக்க வேண்டும்.

கூட்டணி முழுதாக உருவாகுமா என்பதே சந்தேகம்தான். 2019 தேர்தலில் பாஜகதான் மீண்டும் வெற்றி பெறும். பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக ஆட்சி அமைப்பார்.

5 மாநில சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. எதிர்க்கட்சிகள் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பயப்படுகிறது. ராகுலை வேட்பாளராக அறிவித்தால் அந்த கூட்டணியால் வெல்ல முடியாது

பிளவுபட்ட கூட்டணி தான் எதிர்கட்சி கூட்டணி. ஸ்டாலின் முன்நிறுத்தியது ஒரு தவறான பிரதமர் வேட்பாளர் என்பதை வருங்காலம் உணர்த்தும் என்று அவர் கூறியுள்ளார்.
 

.