This Article is From Jun 11, 2019

கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண்! சிசிடிவி வீடியோ!!

பொறியாளர் அருண் ஜூடே அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரும், அவரது பெற்றோரும் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

கோவையில் ஓடும் காரில் இருந்து ஆர்த்தி அருண் என்ற பெண் தள்ளிவிடப்பட்டார்.

ஹைலைட்ஸ்

  • 38வயது பெண் கடந்த மாதம் காரில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டார்
  • அவரது கணவரும், அவரின் பெற்றோரும் தலைமறைவாகியுள்ளனர்.
  • சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து கணவருடன் சென்றுள்ளார்.
Chennai:

கோவையில், ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் வெளியே தள்ளிவடப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. 

இதுகுறித்து அந்த வீடியோவில் உள்ள பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, கடந்த மாதம் தனது கணவரும், அவரது பெற்றோரும் சேர்ந்தே தன்னை ஓடும் காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டதாகவும், தன்னை கொலை செய்ய முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறும்போது, தனது கணவர் ஏற்கனவே தன்னை கொடுமை படுத்தியதால், அவரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில், நீண்ட சமரச பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஆர்த்தி தனது கணவருடன் புதிய வாழ்க்கை தொடங்குவதற்காக சென்றுள்ளார். 

பொறியாளர் அருண் ஜூடே அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரும், அவரது பெற்றோரும் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வருகின்றனர். 

கடந்த 2008ல் இந்த தம்பதியனருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போதிருந்தே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. எனினும், 6 வருடங்களாக பொறுமையாக இருந்த ஆர்த்தி அருண் கடந்த 2014ல் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, மும்பையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். 

k1vnpea


5 வருடங்கள் பிரிந்து இருந்த நிலையில், தனது கணவரின் சமரச பேச்சுவார்த்தையை நம்பி ஆர்த்தி அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்துள்ளார். எனினும் இவரது கணவர் மீதான வன்முறை, விவாகரத்து வழக்குகள் மும்பை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இதனிடையே, மீண்டும் இணைந்த தம்பதியினர், மே மாதத்தில் விடுமுறை சுற்றுலாவாக ஊட்டி சென்றுள்ளனர். அங்கு ஆர்த்தியையும், குழந்தைகளையும் மீண்டும் அருண் அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஊட்டி காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்துள்ளார் ஆர்த்தி, எனினும் போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அருண் அப்போது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தனது பெற்றோரிடம் இருந்து ஆர்த்தியை தனியாக வைப்பதாக எழுதி கொடுத்த அருண், மே.9ஆம் தேதி கோவையில் தனது பெற்றோரை காரில் அழைத்துக்கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து ஆர்த்தி கேள்வி எழுப்பிய போது, அவரை தாக்கி காரில் இருந்து வெளியே தள்ளிவிட்டுள்ளார். இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. காரில் இருந்து கீழே விழுந்த ஆர்த்திக்கு தலை, மூட்டு உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. 
 

தற்போது மும்பையில் வசித்து வரும் ஆர்த்தி கூறும்போது, அவர்கள் எங்களை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். அச்சுறுத்தலில் வாழ வேண்டி உள்ளது. எனது மகன் அவனது தந்தையை பள்ளி வளாகத்தில் பார்த்து மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளான். அவர்கள் என் குழந்தைகளை குறி வைக்கின்றனர். இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

.