This Article is From Jun 26, 2019

கார் பார்க் பண்ண அனுமதி மறுப்பு : அடித்து உதைத்த கும்பல்

9:25 மணியளவில் 7-8 பேர் ஆயுதங்களுடன் வந்து காவலர்களைத் தாக்கியுள்ளனர். காவலர் பாதுகாப்பு அறைக்குள் சென்றபோது அங்கிருந்த கண்ணாடி மற்றும் கம்யூட்டரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த நுழைவாயில் தடையையும் உடைத்துள்ளனர்.

The men also broke the boom barrier at the entry of housing complex.

Ghaziabad:

உத்திர பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் வீட்டுவசதி சங்கத்தின் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதற்கான உருட்டுக் கட்டை மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் பாதுகாப்புபணியில் இருந்தவர்களை தாக்கும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

ஆயுதங்களை ஏந்தியபடி கும்பலாக வரும் நபர்கள் காவலர்களை தாக்குவதுடன் காவல்களின் அறையையும் சூறையாடினர். 

ஞாயிற்றுக் கிழமை இரவு ஓம்வீர் சிங் காஜியாபத்தில் உள்ள கிராசிங்ஸ் ரிபப்ளிக் என்ற இடத்தில் உள்ள ப்ருவியூ லாபோனியின் குடியிருப்பில் தன்னுடைய எஸ்யூவி வாகனத்தை நிறுத்த விரும்பினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஓம்வீர் சிங் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை மிரட்டி சென்றுள்ளார். 

அதன்பின் 9:25 மணியளவில் 7-8 பேர் ஆயுதங்களுடன் வந்து காவலர்களைத் தாக்கியுள்ளனர். காவலர் பாதுகாப்பு அறைக்குள் சென்றபோது அங்கிருந்த கண்ணாடி மற்றும் கம்யூட்டரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த நுழைவாயில் தடையையும் உடைத்துள்ளனர். 

காசியாபாத் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கில் இதுவரையாரும் கைது செய்யப்படவில்லை. 

.