This Article is From Apr 28, 2020

சென்னையில் சிக்கித்தவித்த ஒடிசா மீனவர்கள் - சொந்த ஊர் திரும்ப 1,100 கீ.மி கடலில் பயணம்

25 பேரும் உடனடியாக தனிமைப்படுத்துதலுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக அந்த பகுதி தாசில்தார் ஹரபிரசாத் போய் கூறினார்

சென்னையில் சிக்கித்தவித்த ஒடிசா மீனவர்கள் - சொந்த ஊர் திரும்ப 1,100 கீ.மி கடலில் பயணம்

1,100 கி.மீ பயணிக்க அவர்கள் பயன்படுத்திய மரப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது

ஹைலைட்ஸ்

  • சென்னையில் சிக்கித்தவித்த ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தை சேர்ந்த 25
  • மருத்துவமனையில் அவர்களுக்கு ஆரம்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு
  • ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 14 பேர் உற்பட 39 மீனவர்கள் கடந்த 24ம் தேதி
Berhampore (Odisha):

தற்போது இந்தியாவில் நிலவும் ஊரடங்கு காரணமாக சென்னையில் சிக்கித்தவித்த ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்கள், கடல் மார்க்கமாக பயணித்து நேற்று தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரை அடைந்த பின்னர், 25 பேரும் உடனடியாக தனிமைப்படுத்துதலுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக அந்த பகுதி தாசில்தார் ஹரபிரசாத் போய் கூறினார்.

மருத்துவமனையில் அவர்களுக்கு ஆரம்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும் 1,100 கி.மீ பயணிக்க அவர்கள் பயன்படுத்திய மரப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது என்று போய் கூறினார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 14 பேர் உட்பட 39 மீனவர்கள் கடந்த 24ம் தேதி சென்னையில் இருந்து படகில் புறப்பட்டனர். சென்னையில் படகை வாடகைக்கு வாங்கி அதன் பிறகு பயணத்தை தொடங்கிய மீனவர்களில் ஆந்திராவை சேர்ந்த 14 பேரும் 'டன்குறு' என்ற இடத்தில் இறங்கிக்கொண்டதாக தாசில்தார் கூறினார்.   

கடந்த ஏப்ரல் 20ம் தேதி, கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 27 மீனவர்கள் அருகில் இருக்கும் ஆந்திர மாநிலத்திற்கு சென்று அங்குள்ள இச்சாபூர்மா என்ற இடத்தின் அருகே தரையிறங்கினர். மேலும், 38 மீனவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று பதி சோனேபூர் கடற்கரையில் தரையிறங்கியுள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் வெவ்வேறு கிராமங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

ஊரடங்கு மற்றும் போக்குவரத்து முடக்கம் காரணமாக பலரும் இந்த கடல் மார்க்கமான பயணத்தை மேற்கொண்டு வருவதால் கடலோரப் பகுதியில் கடும் விழிப்புணர்வைக் கடைப்பிடிக்குமாறு மாநில போக்குவரத்து அமைச்சர் பத்மநாப் பெஹெரா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

.