This Article is From May 31, 2019

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி: 5 அதிகாரிகளை கொன்ற வடகொரியா..!?

அமெரிக்கா- வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. 

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை தோல்வி: 5 அதிகாரிகளை கொன்ற வடகொரியா..!?

அந்த அதிர்ச்சியளிக்கும் செய்தியில் கிம் ஜோங் உன்னின் மொழிபெயர்பாளரான ஷின் ஹை யோங்கும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Seoul:

சமீபத்தில் அமெரிக்க அரசு தரப்புடன் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கான வடகொரிய சிறப்பு தூதரை அந்நாடு கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தகவலை தென் கொரிய செய்தித் தாள் ஒன்று வெளியிட்டுள்ளது. 

சோசன் ஈபோ (Chosan IIbo) என்று சொல்லப்படும் தென்கொரிய செய்தித் தாள், கிம் ஹியோக் சோல் என்னும் சிறப்பு தூதர் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது. இவர்தான் வடகொரிய அதிபர் கிம்-க்கு, அமெரிக்க சந்திப்பை ஏற்படுத்தித் தந்தவர் என்று சொல்லப்படுகிறது. “நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து” சோல் கொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. 

சோசன் ஈபோ மேலும், “விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மிரிம் விமான நிலையத்தில் கிம் ஹியூக் சோல் உடன் 4 வெளியுறவுத் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்” என்று கூறியுள்ளது. 

மற்ற அதிகாரிகளின் பெயர் மற்றும் பிற விவரங்கள் குறித்து தகவல் எதுவும் இல்லை. 

இந்த அதிர்ச்சியளிக்கும் தகவல் குறித்து தென் கொரிய அரசு தரப்பு, பதில் சொல்ல மறுத்துவிட்டது. 

அந்த அதிர்ச்சியளிக்கும் செய்தியில் கிம் ஜோங் உன்னின் மொழிபெயர்பாளரான ஷின் ஹை யோங்கும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

வட கொரியா, தனது அணு ஆயுத தயாரிப்புகளை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது தொடர்பாக ஒரு முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து இந்த செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 

அமெரிக்கா- வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. 

வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்தித் தாளான ‘ரோடங் சின்மன்' சில நாட்களுக்கு முன்னர், “நமது நாட்டுக்கு எதிராகவும் கட்சிக்கு எதிராகவும் செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தது. அதைத் தொடர்ந்து தென் கொரிய செய்தித் தாளான ‘சோசன் ஈபோ' இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது. 

.