This Article is From Dec 09, 2018

திமுகவுடன் கூட்டணியில் எந்தக் கட்சியும் நிரந்தரமாக இருந்ததில்லை: பொன்.ராதா

திமுகவுடன் கூட்டணியில் எந்தக் கட்சியும் நிரந்தரமாக இருந்ததில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுகவுடன் கூட்டணியில் எந்தக் கட்சியும் நிரந்தரமாக இருந்ததில்லை: பொன்.ராதா

இதுகுறித்து ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

திமுகவுடன் தோழமைக் கட்சிகளாக எந்த கட்சியும், எந்த காலத்திலும் நிரந்திரமாக இருந்தது கிடையாது. தற்போது அவர்கள் எதை உண்டால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளனர்.

எல்லோரையும் கூட்டு சேர்க்கும் முயற்சியில் அவர்கள் உள்ளனர். அதை அவர்கள் செய்யலாம் அரசியல் கட்சி அவர்களது வேலையை செய்கிறார்கள் அதில் தவறில்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களை முட்டாள் ஆக்க கூடிய வேலயை அவர்கள் செய்யக்கூடாது என்றார்.

மேலும், கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டித் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது. அந்த திட்டத்தை கர்நாடக அரசு முழுமையாக கைவிட வேண்டும். மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள் வரும்போது, அதில் பாதிப்பில்லாமல் செயல்படுத்த வேண்டுமே தவிர, அதனை முழமையாக தடுக்கக் கூடாது.

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடும் என்று அவர் தெரிவித்தார்.

.