This Article is From Jun 29, 2020

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை: மருத்துவர் நிபுணர்கள் குழு!!

சென்னையில் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கைகளை போலவே மதுரை, திருவண்ணாமலை மற்றும் வேலூர் போன்ற நகரங்களிலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க கேட்டுக்கொண்டதாகவும் ஐசிஎம்ஆர் மருத்துவர் ப்ரதீப் கவுர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை: மருத்துவர் நிபுணர்கள் குழு!!

ஹைலைட்ஸ்

  • மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் கலந்தாலோசனையை மேற்கொண்டிருந்தார்
  • முழு முடக்கத்தினை நீடிக்கவில்லை மருத்துவக்குழு பரிந்துரைக்கவில்லை
  • தொற்று எண்ணிக்கை இரட்டிப்பு விகதமும் குறைந்த நாளில் அதிகரித்துள்ளது

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை காரணமக சென்னை, மதுரை உட்பட சில மாவட்டங்களில் பொது முடக்கத்தினை மாநில அரசு அமல்படுத்தப்படுத்தியது. இந்நிலையில் முன்னதாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் இம்மாத இறுதியோடு முடிவடையக்கூடிய நிலையில், தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் கலந்தாலோசனையை மேற்கொண்டிருந்தார். இந்த கலந்தாலோசனைக்கு பிறகு ஐசிஎம்ஆர் மருத்துவர் ப்ரதீப் கவுரை உள்ளடக்கிய மருத்துவ நிபுணர்கள் குழு தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்திருந்தனர்.

இதில், முழு முடக்கத்தினை நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரைக்கவில்லை என்றும், தற்போது சென்னையில் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கைகளைப் போலவே மதுரை, திருவண்ணாமலை மற்றும் வேலூர் போன்ற நகரங்களிலும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கக் கேட்டுக் கொண்டதாகவும் ஐசிஎம்ஆர் மருத்துவர் ப்ரதீப் கவுர் கூறியுள்ளார்.

மேலும், சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அதே போல தொற்று எண்ணிக்கை இரட்டிப்பு விகதமும் குறைந்த  நாளில் அதிகரித்துள்ளது. இதன் மூலமாக குறைந்த நாட்களில் அதிகமான தொற்று நோயாளிகளை நம்மால் அடையாளம் காண முடியும் என்பது நல்ல அம்சமாகும் என்றும் கவுர் கூறியுள்ளார். 

அவரைத் தொடர்ந்து பேசிய சிறப்பு மருத்துவர் குகானந்தம், “சமூக பொருளாதார சிக்கல்களால் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதில் சிக்கல் உள்ளது.“ என தெரிவித்திருந்தார்.  

.