This Article is From Dec 05, 2019

நான் பூண்டு வெங்காயம் அதிகம் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து வருகிறேன் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

“நான் நிறைய வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதில்லை எனவே கவலையில்லை. வெங்காயத்துடன் அதிகம் சம்பந்தமில்லாத ஒரு குடும்பத்திலிருந்து நான் வருகிறேன்” என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட மக்களவையில் சிரிப்பலை எழுந்தது

அதிக வெங்காயத்தை சாப்பிடுவது ஒருவரை எரிச்சலடையச் செய்கிறது -நிர்மலா சீதாராமன்

ஹைலைட்ஸ்

  • Nirmala Sitharaman explained measures to control onion prices
  • These included imposing a ban on exports, enforcing a stock limit
  • Onions are being transported from surplus to deficit areas in the country
New Delhi:

பாராளுமன்றத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவது குறித்த விவாதத்தின் போது எதிர்க்கட்சியினர் கேட்டதற்காக “வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை என்றும் சமையலறையில் அதிகம் வெங்காயம், பயன்படுத்தாத குடும்பத்தை சேர்ந்தவர்” என்று கூறினார். 

 “நான் நிறைய வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதில்லை எனவே கவலையில்லை. வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தாத குடும்பத்திலிருந்து நான் வருகிறேன்” என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட மக்களவையில் சிரிப்பலை  எழுந்தது. "அதிக வெங்காயத்தை சாப்பிடுவது ஒருவரை எரிச்சலடையச் செய்கிறது" என்று சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அதிகரித்து வரும் வெங்காய விலையைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், வெங்காய இருப்பின் அளவை குறைத்து வைக்கவும் இடைத்தரகர்களை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெங்காயம் உபரியாக உள்ள இடத்திலிருந்து பற்றாக்குறை பகுதிகளுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கொல்கத்தாவில் வெங்காய விலை ரூ. 150வரை உயரக்கூடும் என்ற அச்சுறுத்தல் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயம் திருடு போனது என்று கூட விவசாயி புகார் அளித்துள்ளார். பல  விவசாயிகள் இரவில் தங்கள் விளைநிலங்களை பாதுகாத்து வருகின்றனர். வெங்காயம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் காணாமல் போய்விடுகின்றன. 

நாடு முழுவதும் பெரும்பாலான சில்லறை சந்தைகளில் வெங்காயம் ரூ. 100 முதல் 110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

.