This Article is From Jan 17, 2020

நிர்பயா வழக்கு : குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனை ஜனவரி 22-ம்தேதியான அடுத்த வாரம் புதன்கிழமை நிறைவேற்றப்படவிருந்தது. இதையொட்டி அனைத்து விதமான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

நிர்பயா வழக்கு : குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்சய் தாகூர், பவன் குப்தா.

New Delhi:

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் குப்தாவின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. இந்த மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

. முன்னதாக, முகேஷ் குமார் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு செவ்வாயன்று நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து முகேஷ் குமார் குடியரசு தலைவருக்கு கருணை மனுவை அனுப்பி வைத்தார். மத்திய அரசு மூலமாக செல்லும் இந்த மனு தற்போது குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்சய் தாகூர், பவன் குப்தா ஆகியோர் அடுத்த வாரம் புதன்கிழமை காலை 7 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர். டெல்லி திகார் சிறையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

முன்னதாக விசாரணை நீதிமன்றம் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அளித்தது. 2012 டிசம்பரில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குற்றவாளிகளின் தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று புதிய சிக்கல் ஏற்பட்டது.

குற்றவாளிகளின் கருணை மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்படாத வரையில், தங்களால் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று திகார் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதற்கிடையே, குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு, குற்றவாளிகளுக்கு எதிராக குடியரசு தலைவரிடம் பரிந்துரை செய்திருக்கிறது.

கருணை மனு காரணமாக குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்படுவது 14 நாட்கள் வரையில் தள்ளிப் போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து நிர்பயாவின் தாயார் கூறுகையில், ‘கருணை மனு தாக்கல் செய்வதற்கு குற்றவாளிகளுக்கு உரிமை இருக்கிறது என்றால் மகளை 7 ஆண்டுகளுக்கு முன்பு மகளை இழந்த எங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதற்காக கடந்த பல ஆண்டுகளாக பல நீதிமன்றங்களை நாடியுள்ளோம்' என்று தெரிவித்தார்.

கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதி 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தெற்கு டெல்லி சாலையில் கீழே தள்ளி விடப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடைசியாக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2012 டிசம்பர் 29-ம்தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள். அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் விசாரணையின்போது தூக்கிட்டுக் கொண்டார். குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது மீதமுள்ள 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

.