This Article is From Jul 17, 2018

கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான ஹைதரபாத் ஐடி பணியாளர்; வீடியோ பதிவு

அசென்சர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மொகமத் அசாம், கடந்த வெள்ளி கிழமை அன்று, பிடார் கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்டார்

New Delhi:

புதுடில்லி: கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில், குழந்தைகளுக்கு சாக்குலேட் அளித்த 32 வயது ஐடி பணியாளரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கருதி கிராம மக்கள் அடித்து கொன்றனர்.

அசென்சர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மொகமத் அசாம், கடந்த வெள்ளி கிழமை அன்று, பிடார் கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

அசாமின் இறுதி நிமிடங்கள் பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவு என்.டி டிவி தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது. அதில், காவல் துறையினர் தடுக்க முயன்றும், கிராம மக்கள் அசாமை கயிறு கட்டி இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

முதற்கட்ட வழக்கு விசாரணையில், 28 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முக்கியமாக, 'மர்க்கி மதர்' என்ற வாட்ஸ் அப் குழுவின் அட்மின் மனோஜ் குமார் பிராதர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை கடத்தல் குறித்த போலி செய்திகள், இந்த வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தைகளுக்கு சாக்குலேட் அளித்த இளைஞர்களை கிராம மக்கள் தாக்க முயன்றதும், காரில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர். இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்த கிராம மக்கள், கார் நின்றவுடன் மொகமத் அசாமை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கிராம மக்களை கட்டுப்படுத்த முயன்றும், கிராம மக்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. கொடூர தாக்குதலுக்கு ஆளான அசாம், பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

.