This Article is From Apr 29, 2020

மத சுதந்திரத்தினை இந்தியா பறிக்கிறதா? அமெரிக்க அறிக்கையை மறுக்கும் மத்திய அரசு!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு தண்டனைகள் இல்லாத ஒரு புதிய நடைமுறையை இந்தியா உருவாக்கி வருவதாகவும், மத சுதந்திரத்தினை மீறிய நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அழைப்பு விடுத்துள்ளது.

யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் குறிப்பிட்ட 14 நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

New Delhi:

சர்வதேச அளவில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்து விவாதங்களும் விமர்சனங்களும் முன்னெழுந்துள்ள நிலையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) ஆண்டு அறிக்கையின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கையில் தற்போது முதல் முறையாக  பாகிஸ்தான், சீனா மற்றும் வட கொரியா உள்ளிட்ட 14 நாடுகளின் பெயர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா மீதான மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-ன் தவறான தகவல்கள் தற்போது புதிய நிலைகளை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் திட்டமிட்ட மத சுதந்திரத்தின் மீறல்களில் ஈடுபடுகின்றன என்று யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் குற்றம்சாட்டியுள்ளது.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு தண்டனைகள் இல்லாத ஒரு புதிய நடைமுறையை இந்தியா உருவாக்கி வருவதாகவும், மத சுதந்திரத்தினை மீறிய நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அழைப்பு விடுத்துள்ளது. 

இரண்டாவது முறையாக 2019 தேர்தலில் வெற்றிப் பெற்ற பாஜக தனது நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தினை மீறக்கூடிய கொள்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை (இஸ்லாமியர்கள்) ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல உத்தரப் பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்ய நாத், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் பிப்ரவரி மாதம் மூன்று நாட்கள் நடந்த கலவரத்தில் இஸ்லாமியர்களின் பகுதிகள் தாக்கப்பட்டன. டெல்லி காவல்துறை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இது கலவரத்தினை தடுக்க தவறியுள்ளது. என யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அறிக்கை கூறியுள்ளது.

இந்த விமர்சனங்களையும் புதிய தகவல்களையும் நிராகரித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா “யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் அறிக்கையில் இந்தியாவின் மீதான விமர்சனங்களை நிராகரிக்கின்றோம். இந்தியாவுக்கு எதிரான ஒரு தலைப்பட்சமான இதுபோன்ற கருத்துகள் புதியவை அல்ல. தற்போது உள்ள நெருக்கடிக் காலகட்டத்தில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-ன் விமர்சனங்கள் புதியதாக உள்ளது.“ என கூறியுள்ளார்.

யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-ன் ஒன்பது உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்களை சிவில் நடைமுறைகளின் குறியீடு(CPC) துறையில் நியமிக்க யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மற்றொரு யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் உறுப்பினர் இந்தியா குறித்த தனது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

சீனா, வடகொரியா போல இந்தியா அல்ல. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை சிவில் சமூகத்தினர், காங்கிரஸ் கட்சி, சட்ட வல்லுநர்கள், இதர அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் நேரடியாகவே எதிர்க்கின்றன என யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-ன் கமிஷனர் டென்ஜின் டோர்ஜி கூறியுள்ளார்.

 1998 காலகட்டங்களில் அமெரிக்க அரசால் நிறுவப்பட்ட யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்,  வெளியுறவுத்துறை விதிமுறைகளுக்குக் கட்டுப்படாதவையாகும். காலங்காலமாக இந்தியா யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் கருத்துக்களை மறுத்து வந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் உறுப்பினர்களுக்கு விசாவினை கூட இந்தியா மறுத்துள்ளது.

முன்னதாக இம்மாத 16ம் தேதியில் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் தங்கள் மத அடையாளங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர் என்று நாட்டை விமர்சித்ததற்காக யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-ஐ இந்தியா கடுமையாக விமர்சித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

.