This Article is From Jun 13, 2018

போலி விளம்பரங்களைத் தடுக்க ஃபேஸ்புக் புதிய முயற்சி

மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் தரும் விளம்பரங்களை கண்டறிந்து தவிர்ப்பதற்கான வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது

போலி விளம்பரங்களைத் தடுக்க ஃபேஸ்புக் புதிய முயற்சி

ஹைலைட்ஸ்

  • மிகைப்படுத்தப்படும் விளம்பரங்கள் தடுக்க முயற்சி
  • போலி விளம்பரங்களால் பயன்பாட்டாளர்கள் அதிருப்தி
  • விளம்பரங்கள் குறித்து ஃபேஸ்புக் கருத்து கேட்கும்
மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் தரும் விளம்பரங்களை கண்டறிந்து தவிர்ப்பதற்கான வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஃபேஸ்புக் விளம்பரங்கள் வழியாக பொருட்களை வாங்கும் பயன்பாட்டாளர்களின் ஃபீட்பேக்கை அறிய உதவியாக இருக்கும், என்று ஃபேஸ்புக் நிறுவனம் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தது.

“ஃபேஸ்புக் விளம்பரங்களின் மூலம் பொருட்கள் வாங்கியுள்ளவர்களிடம் பேசினோம். அதில், தவறான தகவல்களை அளிக்கும் விளம்பரங்கள் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்” என்று அந்நிறுவனம் கூறியது.

“புதிய வசதியை பயன்படுத்துவதற்கு, ‘Ads Activity’ பயன்பாட்டாளர் பார்த்த விளம்பரங்களின் பட்டியல் இருக்கும். அதில் “Leave the Feedback‘’ என்ற பகுதியில், சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். ”

அந்த கருத்துக்களை ஆராய்ந்து போலியான தகவல்கள் தரும் விளம்பரதாரர்களுக்கு ஃபேஸ்புக்கில் இருந்து எச்சரிக்கை அளிக்கப்படும்.

"அப்படி எதிர்மறை கருத்துகள் கொண்ட விளம்பர நிறுவனங்கள் மாற்றங்கள் செய்யவில்லை என்றால், குறிப்பிட்ட நிறுவனம் விளம்பரம் செய்யக் கூடிய எண்ணிக்கை அளவு குறைக்கப்படும் " என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.