This Article is From Feb 01, 2019

புதிய விதிமுறைகளால் சில பொருட்களை தளத்திலிருந்து நீக்கியது அமேசான் இந்தியா!

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால், அமேசான் அவசர அவசரமாக பொருட்களை நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புதிய விதிமுறைகளால் சில பொருட்களை தளத்திலிருந்து நீக்கியது அமேசான் இந்தியா!

டிசம்பர் மாதம் இந்தியா, அந்நிய நேரடி முதலீடுகளில் மாற்றத்தை கொண்டு வந்தது.

ஹைலைட்ஸ்

  • சில எக்கோ ஸ்பீக்கர்கள், பேட்டரிகள் மற்றும் ரூம் கிளீனர்களை நீக்கியுள்ளது
  • இ-காமர்ஸ் புதிய விதிகளால் தளத்திலிருந்து பல பொருட்களை நீக்கயது அமேசான்
  • அமேசானும், வால்மார்ட்டும் புதிய விதிகளின் லாபியில் ஈடுபட்டுள்ளன
New Delhi/Mumbai:

இ-காமர்ஸ் விதிகள் இந்தியாவில் கடந்த வெள்ளியன்று நடைமுறைக்கு வந்ததால் அமேசான் தனது இந்திய தளத்திலிருந்து பல பொருட்களை நீக்கியுள்ளது. குறிப்பாக சில எக்கோ ஸ்பீக்கர்கள், பேட்டரிகள் மற்றும் ரூம் கிளீனர்களை நீக்கியுள்ளது.

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால், அமேசான் அவசர அவசரமாக பொருட்களை நீக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிறுவனங்களுக்கு இந்த விதிகளை ஏற்பதை தவிர வேறு எந்த வழியுமில்லை என்றும் கூறப்படுகிறது.

டிசம்பர் மாதம் இந்தியா, அந்நிய நேரடி முதலீடுகளில் மாற்றத்தை கொண்டு வந்தது. இது அமேசானுக்கு மட்டுமல்ல வால்மார்ட், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களையும் பாதித்தது.

புதிய இ-காமர்ஸ் முதலீடுகளுக்கான விதிகள் மூலம் ஆன்லைன் ரீட்டெய்லர்கள், வெண்டார்கள் மூலம் பொருட்கள் விற்பதை நிறுத்தியுள்ளது. தனது தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக விற்பதையும் நிறுத்தியுள்ளது.

அமேசான் தளத்தில் இருக்கும் சில விற்பனையாளர்கள் இந்த விதிமுறை மாற்றத்தால் இந்திய தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மிகபெரிய டெக்ஸ்டைல் நிறுவனமான ஷப்பர் ஸ்டாப், ப்ரெஸ்டொ, எக்கோ ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன.

அமேசானும், வால்மார்ட்டும் இதற்கான லாபியில் ஈடுபட்டன. ஆனால் அதற்கான வாய்ப்புகள் உருவாகவில்லை. 

"தற்போது இந்தியாவில் சூழல் சரியில்லை. ஆனால் நீண்ட நாட்களில் இது சரியாகும்" என்று நம்புவதாக அமேசான் தெரிவித்துள்ளது. 

புதிய விதிகளில் மாற்றம் வரும்வரை சில பொருட்களை நீக்கி கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளது.

.