This Article is From Mar 07, 2020

புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க அமேசானில் வாங்கப்பட்ட இரசாயனம்

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் தடயவியல் ஆய்வு மூலம் அம்மோனியம் நைட்ரேட், நைட்ரோ-கிளிசரின் மற்றும் ஆர்.டி.எக்ஸ் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு வெடிகுண்டு தயாரிக்க அமேசானில் வாங்கப்பட்ட இரசாயனம்

பயங்கரவாத தாக்குதலில் கடந்த ஆண்டு தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் ஊழியர்கள் கொல்லப்பட்டனர். (கோப்பு)

ஹைலைட்ஸ்

  • Terror attack killed 40 soldiers in Pulwama last year
  • Accused delivered explosives to JeM terrorists after buying online
  • NIA later took over Pulwama attack case
Srinagar:

புல்வாமா தாக்குதலை நடத்துவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆன்லைனில் அதற்கான ரசாயனங்கள் வாங்கிய பின்னர் அந்த நபர் ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாதிகளுக்குத் தனிப்பட்ட முறையில் பொருட்களை வழங்கினார் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் (சிஆர்பிஎஃப்) படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மேம்பட்ட வெடிமருந்து சாதனத்தை (ஐஇடி) தயாரிக்க ஆன்லைனில் ரசாயனங்கள் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாத தாக்குதலில் கடந்த ஆண்டு தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் ஊழியர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகரைச் சேர்ந்த வைஸ்-உல்-இஸ்லாம் (19), மற்றும் புல்வாமாவைச் சேர்ந்த முகமது அப்பாஸ் ராதர்(32), ஆகியோர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கடந்த வாரத்தில் ஐந்து ஆக உயர்ந்துள்ளது கொண்டனர்.

"ஆரம்ப விசாரணையின்போது, ​​பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாதிகளின் வழிகாட்டுதலின் பேரில் ஐ.இ.டி, பேட்டரி மற்றும் பிற பாகங்கள் தயாரிப்பதற்கான ரசாயனங்களை வாங்குவதற்காக வைஸ்-உல்-இஸ்லாம் தனது அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் கணக்கைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது" என்று அந்த அதிகாரி கூறினார்.

தாக்குதலை நடத்துவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆன்லைனில் ரசாயனங்கள் வாங்கிய பின்னர் தனிப்பட்ட முறையில் ஜெ.எம் பயங்கரவாதிகளுக்கு வைஸ்-உல்-இஸ்லாம் பொருட்களை வழங்கியுள்ளார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெ.எம் இயக்கத்தின் தலைமறைவு செயல்பாட்டாளரான மொஹமட் உமர் 2018 ஏப்ரல்-மே காலகட்டங்களில் காஷ்மீருக்கு வந்த பிறகுத் தனது வீட்டில் தங்குமிடம் கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக அதிகாரி கூறியுள்ளார். மேலும், புல்வாமா தாக்குதலுக்கு முன்னர் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஆதில் அகமது தார், சமீர் அகமது தார் மற்றும் பாகிஸ்தானியரான கம்ரான் ஆகியோரையும் அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.

மார்ச் 3 ம் தேதி கைது செய்யப்பட்ட ஹக்ரிபோராவைச் சேர்ந்த தாரிக் அகமது ஷா மற்றும் அவரது மகள் இன்ஷா ஜான் ஆகியோர் தங்களது வீட்டில், மேற்குறிப்பிட்ட ஆதில் உள்ளிட்ட ஜெ.எம் பயங்கரவாதிகளுக்கு அவர் பாதுகாப்பான தங்குமிடம் வசதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வைஸ்-உல்-இஸ்லாம் சனிக்கிழமையன்று ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், அதே நேரத்தில் இந்த வழக்கில் மேலும் விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்வாமாவில் பிப்ரவரி 14, 2019 தாக்குதலுக்குப் பின்னால் நடந்த சதித்திட்டத்தை விசாரிக்க என்ஐஏ இந்த வழக்கை எடுத்துக் கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து ஜெ.எம் இயக்கம் வெளியிட்ட வீடியோ தாரிக் அகமது ஷாவின் வீட்டில் படமாக்கப்பட்டது. பிப்ரவரி 28 அன்று, என்ஐஏ இந்த வழக்கில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்தது, இந்த நிலையில் என்.ஐ.ஏ கைது மேலும் ஒரு கைது நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் புல்வாமா பகுதியில் வசிக்கக்கூடிய 22 வயதான ஷாகிர் பஷீர் மேக்ரே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தற்கொலைப் படையைச் சார்ந்த ஆதிலுக்கு கைது செய்யப்பட்ட ஷாகிர் பஷீர் மேக்ரே தங்குமிடம் மற்றும் பிற தளவாட உதவிகளை வழங்கியிருந்தார். பாகிஸ்தானிய பயங்கரவாதி முகமது உமர் பாரூக் என்பவரால் 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆதில் அறிமுகப்படுத்தப்பட்டார்,

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் தடயவியல் ஆய்வு மூலம் அம்மோனியம் நைட்ரேட், நைட்ரோ-கிளிசரின் மற்றும் ஆர்.டி.எக்ஸ் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்ற முக்கிய பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு மார்ச் 11 அன்று பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட பட்டியலில் ஜெ.எம் இயக்கத்தின் தெற்கு காஷ்மீர் பிரதேச தலைவர் முதாசீர் அகமது கான் பெயரும் உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முஹம்மது உமர் பாரூக் மற்றும் ஐ.இ.டி நிபுணர் கம்ரான் இருவரும் கடந்த ஆண்டு மார்ச் 29 அன்று கொல்லப்பட்டனர்; கடந்த ஆண்டு ஜூன் 16 மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதிகளில் காஷ்மீருக்கான ஜெ.எம் தளபதி கரி யாசீர் மற்றும் இந்த இயக்கத்தின் சில முக்கிய பொறுப்பாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

.