This Article is From Jul 07, 2018

நெறுங்கும் சட்டமன்றத் தேர்தல்… ராஜஸ்தானுக்கு விசிட் அடிக்கும் மோடி!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு பிற்பகுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது

ஹைலைட்ஸ்

  • வசுந்தரா ராஜே தலைமையில் ராஜஸ்தானில் ஆட்சி நடந்து வருகிறது
  • இந்த விசிட்டின் போது 13 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மோடி
  • ஜெய்ப்பூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திலும் பேசுவார் மோடி
New Delhi:

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு பிற்பகுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இன்று அம்மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூருக்குச் சென்று 13 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பிற்பகுதியில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பாஜக சார்பில் 13 அரசு திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்ட உள்ளது. 13 திட்டங்களும் நகர்ப்புற உட்கட்டமைப்புகளுக்காக செயல்படுத்தப்பட உள்ளன. இந்த அனைத்துத் திட்டங்களுக்காக 2,100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டங்களை தொடங்கி வைக்கம் போது, பிரதமர் மோடி மத்திய மற்றும் மாநில அரசுகளால் முன்னரே அமல்படுத்தப்பட்ட திட்டங்களினால் பயனடைந்த மக்களுடன் கலந்துரையாட உள்ளார். இதற்காக ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மன் சிங் மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநிலந்நின் பல்வேறு பகுதிகளிலிருந்து திட்டங்களால் பயனடைந்த 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். 

நிகழ்ச்சிக்கு, திட்டங்களால் பயனடைந்தவர்களை அழைத்து வருவதற்கு மட்டும் 7 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. 5,579 பேருந்துகள் மூலம் ராஜஸ்தானில் இருக்கும் 33 மாவட்டங்களில் இருந்தும் மக்கள் அழைத்துவரப்படுவர். இதற்காக செலவாகும் பணம் திட்டங்களின் நிதியிலிருந்தே எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பயனர்களுடன் கலந்துரையாடிய பின்னர், ஜெய்ப்பூரில் பொதுக் கூட்டத்திலும் உரையாடுவார் மோடி. ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி, பிரதமரின் இந்த விசிட் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

.