This Article is From Nov 21, 2018

மீ டூ புகாரில் சிக்கிய நடிகர் மீது பலாத்கார வழக்கு!

‘என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு விந்தா நந்தா எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும்

மீ டூ புகாரில் சிக்கிய நடிகர் மீது பலாத்கார வழக்கு!

விந்தா நந்தா, அலோக்நாத் தன்னை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார் என்று முன்னர் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்

Mumbai:

மீ டூ புகாரில் சிக்கிய பிரபல நடிகர் அலோக்நாத் மீது, பலாத்கார வழக்கைப் பதிவு செய்துள்ளது மும்பை காவல் துறை. எழுத்தாளர் விந்தா நந்தா கொடுத்த புகாரின் பேரில் அலோக்நாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை காவல் துறையின் மூத்த அதிகாரி மனோஜ் ஷர்மா, ‘விந்தா நந்தா அளித்த புகாரை அடுத்து, ஓஷிவாரா போலீஸ், அலோக்நாத் மீது பாலியல் பலாத்கார வழக்கைப் பதிவு செய்துள்ளனர்' என்று தகவல் தெரிவித்துள்ளார்.

விந்தா நந்தா, அலோக்நாத் தன்னை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார் என்று முன்னர் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இதையடுத்து அலோக்நாத்தின் மனைவி, விந்தா நந்தாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மும்பை கீழ்நிலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மேலும் அலோக்நாத், நந்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கிற்கான மனுவில் அலோக்நாத், ‘என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு விந்தா நந்தா எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும். மேலும் எனக்கு ஒரு ரூபாய் இழப்பீடாகவும் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

.