This Article is From Aug 10, 2019

கேரள நிலச்சரிவில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மனிதர்! அதிர்ச்சியூட்டும் வீடியோ!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்திருக்கிறது. 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் நிலச்சரிவுக்கு சுமார் 40 பேர் பலியாகி உள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • The video has surfaced from Malappuram district of Kerala
  • Several districts are battling flood fury in Kerala
  • More than 40 people have been killed, over one lakh have been displaced
Malappuram:

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. 

கேரள மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கிறது.  இதனால் எர்ணாக்குளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து இங்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இதேபோன்று ஆலப்புழா, கோட்டயம், திரிச்சூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை வயநாடு மாவட்டத்தில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது ஒரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கருப்புக் குடையுடன் செல்லும் அவர், நிலச்சரிவு ஏற்படுவதை தொடர்க்கத்தில் பார்த்து பின்னோக்கி ஓடி வந்தது விட்டார்.

அவர் வந்த ஒரு வினாடிக்குள் நிலச்சரிவு ஏற்பட்டு அந்த இடம் முழுவதும் மணலாலும், மரங்களாலும் நிரப்பப்படுகிறது. இந்த சில நொடி வீடியோ காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 

.