This Article is From Jul 12, 2018

ஹாலிவுட் திரைப்படமாகிறது தாய்லாந்து குகை சம்பவம்

உலகையே திரும்பி பார்க்க வைத்த, தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம், ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.

ஹாலிவுட் திரைப்படமாகிறது தாய்லாந்து குகை சம்பவம்
Los Angeles:

லாஸ் ஏன்சல்ஸ்: உலகையே திரும்பி பார்க்க வைத்த, தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம், ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.

பியூர் பிளிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோர உள்ளது. திரைப்படம் குறித்த அறிவிப்பை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மைக்கேல் ஸ்காட் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

தாய்லாந்து குகையில் மீட்பு பணிகள் நடைப்பெற்ற போது, மைக்கல் ஸ்காட் களத்தில் இருந்து தகவல்கள் சேகரித்துள்ளார். “உலகமே பிரமிக்கும் வகையில் மீட்பு பணிகள் நடைப்பெற்றதை நான் பார்த்தேன். எனவே, இந்த நிகழ்ச்சியை திரைப்படமாக்க முடிவு செய்தோம்” என்று ஸ்காட் தெரிவித்தார்.

மீட்பு பணியில் ஈடுபட்ட 90 ஓட்டுனர்கள், குகைக்குள் மாட்டி கொண்ட இளம் வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோருடன் மைக்கேல் ஸ்காட் உரையாடியுள்ளார். “இது வெறும் திரைப்படம் அல்ல, மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரையும், குறிப்பாக உயிரை தியாகம் செய்த பணியாளரையும் கவுரவிக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளது” என்று ஸ்காட் தெரிவித்தார். 

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, குகைக்குள் இருந்த தண்ணீரில் சிக்கி உயிரிழந்த மீட்பு பணியாளர் சமன் குனன், ஸ்காட்டின் மனைவியின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது

30 மில்லியன் முதல் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட உள்ள இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக கவோஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆடம் ஸ்மித் பணியாற்ற உள்ளார்.
 

.