This Article is From Feb 15, 2019

போட்டோ எடுக்க சென்ற இடத்தில் கடி வாங்கிய அழகி - வைரல் வீடியோ!!!

இந்த வீடியோவை இதுவரை 57 இலட்ச பேர் பார்த்துள்ளனர். மேலும் பலர் கமென்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்

போட்டோ எடுக்க சென்ற இடத்தில் கடி வாங்கிய அழகி - வைரல் வீடியோ!!!

பன்னி கடித்ததால் வைரலான அழகியின் வீடியோ

பஹாமஸில் பிக் மேஜர் கேய் என்னும் தீவு உண்டு. இதனை பன்னிகளின் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான பன்னிகளால் தான் இந்தத் தீவிற்கு 'பன்னிகளின் தீவு' என்று பெயர்.

இந்தத் தீவிற்கு பல மாடல்கள் போட்டோ எடுக்க வருகை தருவார்கள். அப்படித்தான் மாடல் அழகி மிச்சல் லுவினும் இந்தத் தீவிற்கு வந்தார். இங்கு பன்னிகளுடன் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூகவலைதளத்தில் பதிவு செய்ய எண்ணினார் மிச்சல்.

ஆனால் அங்கு நடந்ததோ வேறு. பன்னிகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த மிச்சலை யாரும் எதிர்பார்க்காத விதமாக ஒரு பன்னி கடித்துவிட்டது. அத்துடன் நிறுத்தாமல், மித்சலை துரத்த ஆரம்பித்தது. இந்த வேடிக்கையான வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மித்சல்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Michelle Lewin (@michelle_lewin) on

 

இந்த வீடியோவை இதுவரை 57 இலட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் பலர் கமென்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.

மிச்சலின் கணவர், ‘மிச்சல் நலமாக உள்ளார். நல்ல வேளையாக பன்னி கடித்ததில் எந்த விதமான ஆபத்தும் நிகழவில்லை' என பேட்டி அளித்துள்ளார்.

 

மேலும் படிக்க : மெக்டோனால்டு வாடிக்கையாளர்களை அலறவிட்ட எலி... வீடியோ உள்ளே!

Click for more trending news


.