This Article is From Dec 19, 2018

‘குடிநீர் தட்டுப்பாடா… நெவர்..!’- செல்லூர் ராஜு உறுதி

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக குடநீர் தட்டுப்பாடு குறித்து பேசினார்

‘குடிநீர் தட்டுப்பாடா… நெவர்..!’- செல்லூர் ராஜு உறுதி

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழக குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் செல்லூர் ராஜு கூறுகையில், ‘அடுத்து வரும் மாதங்களில் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்றால், அதற்கு முதல்வர் எடப்பாடியார் எடுத்த சீறிய நடவடிக்கையே காரணமாக இருக்கும். மதுரையைப் பொறுத்தவரை தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்றதால், தற்போது நிலத்தடி நீர் நன்றாக அதிகரித்துள்ளது. இதற்கு சிறப்பாக நடந்த குடிமராமத்துப் பணிகளே காரணம். மதுரை மாவட்டத்தில், இந்த முறை மழை குறைவு. அப்படி இருந்தாலும், எல்லா நீர் நிலைகளிலும் இருப்பு நீர் அளவு அதிகமாக உள்ளன. இதனால், மதுரை மாநகர் மக்களுக்கு கோடை காலத்தில் நீர் தட்டுப்பாடு இருக்காது. மதுரையில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான நீர் உள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்கள், ‘இந்த முறை தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எனவே, நீர் தட்டுப்பாடு ஏற்படுமா?' என்று கேட்டதற்கு, ‘இந்த ஆண்டு குடி தண்ணீர் பிரச்னை இல்லை. உறுதியாக இல்லை என்று சொல்ல முடியும்' என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, ‘எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததற்கு யார் காரணம்?' என்றதற்கு,

‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர முழு முதல் காரணம், ஜெயலலிதாதான். அவர் தான் முதலாவதாக இது குறித்து நடவடிக்கை எடுத்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி, எய்ம்ஸ் குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். எய்ம்ஸ் குறித்த தேவையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புரிந்து கொண்டு ஒப்புதல் அளித்தமைக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்றார்.

.