This Article is From Jun 02, 2020

இந்திய எல்லையில் சீனா என்ன செய்கிறது..? - அமெரிக்க அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

"சர்வாதிகர அரசுகள் இப்படிப்பட்ட மோதல் நடவடிக்கைகளில்தான் ஈடுபடும்"

இந்திய எல்லையில் சீனா என்ன செய்கிறது..? - அமெரிக்க அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சீனா இப்படி செய்வதனால் அது அந்நாட்டு மக்களை மட்டுமல்ல, ஹாங் காங் மக்களையும், ஏன் உலக மக்களையும் வெகுவாக பாதிக்கிறது.

ஹைலைட்ஸ்

  • லடாக் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது
  • இரு நாடுகளும் பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன
  • சீன தரப்பும் பிரச்னையைப் பேசித் தீர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளது
Washington, United States:

லடாக்கை ஒட்டிய இந்திய - சீன எல்லையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீன ராணுவத்தின் நடவடிக்கையால் இரு தரப்புக்கும் இடையில் அங்கு மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, எல்லையில் சீனா எப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறித்துப் பேசியுள்ளார்.

லடாக் மற்றும் வடக்கு சிக்கிம் பகுதிகளை ஒட்டி கடந்த சில நாட்களாக இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவங்களும், தங்களது துறுப்புகளைக் குவித்து வருவதாக தெரிகிறது. 

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய மைக் பாம்பியோ, “சீன தரப்பு, இந்தியாவின் வடக்கு எல்லையில் தொடர்ந்து படைகளைக் குவித்து வருகிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி, கொரோனா வைரஸ் தொற்று குறித்தான தகவலை உலகிடமிருந்து மறைத்தது. ஹாங் காங் மக்களின் சுதந்திரத்தைப் பறித்தது. தற்போது இந்தியாவுடன் உரசல் போக்கைக் கையாண்டு வருகிறது.

சர்வாதிகர அரசுகள் இப்படிப்பட்ட மோதல் நடவடிக்கைகளில்தான் ஈடுபடும். சீனா இப்படி செய்வதனால் அது அந்நாட்டு மக்களை மட்டுமல்ல, ஹாங் காங் மக்களையும், ஏன் உலக மக்களையும் வெகுவாக பாதிக்கிறது.

சீனா, இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது சமீபமாக மட்டுமல்ல. கடந்த பல ஆண்டுகளாக இப்படித்தான் அவர்கள் நடந்து வருகிறார்கள். தங்கள் ராணுவ வலிமையை அவர்கள் தொடர்ந்து அதிகரித்து, மூர்க்கத்தனமாக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களின் அதிகாரத்தை வலுவாக்கவே அவர்கள் உலகின் பல இடங்களில் துறைமுகம் கட்டி வருகிறார்கள்,” என்று கூறினார். 

அவர் மேலும், “கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க தரப்பு, சீனாவுக்கு சரியான வகையில் பதிலடி கொடுக்கவில்லை. காரணம், சீனாவை 150 கோடி மக்கள் இருக்கும் ஒரு சந்தையாக அமெரிக்கா பார்த்தது. அமெரிக்கப் பொருளாதாரத்திற்குச் சீனா மிக முக்கியம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டது,” என்றார்.


 

.