This Article is From Oct 04, 2019

மனைவிக்காக கர்ப்பிணியாக மாறிய கணவர் - கலக்கல் புகைப்படம்

மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் போட்டோஷூட் எடுக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர். மகப்பேறு கால புகைப்படத் தொகுப்பை எடுக்க முடியாமல் கவலை அடைந்துள்ளார்.

மனைவிக்காக கர்ப்பிணியாக மாறிய கணவர் - கலக்கல் புகைப்படம்

தனது வயிற்றை கர்ப்பிணியின் வயிறைப் போல் காட்டி, விதவிதமான போஸ்களை கொடுத்துள்ளார்

அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தை சேர்ந்த  கெல்ஸி ப்ரூவர் தாய்மை அடைந்துள்ளார். மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் போட்டோஷூட் எடுக்க கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.  

மகப்பேறு கால புகைப்படத் தொகுப்பை எடுக்க முடியாமல் கவலை அடைந்துள்ளார். இந்நிலையில்  அவரது கணவர் ஜாரெட் ப்ரூவர் அவரை உற்சாகப்படுத்த மகப்பேறு கால போட்டோஷூட்டை எடுக்க தானே முன்வந்துள்ளார். 

அவரை வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. பார்த்த அனைவரும் சிரிப்புடன் பல கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். 

மனைவியை உற்சாகப்படுத்த கணவரின் இந்த புதிய முயற்சியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஜாரெட் ப்ரூவர் தனது வயிற்றை கர்ப்பிணியின் வயிறைப் போல் காட்டி, விதவிதமான போஸ்களை கொடுத்துள்ளார். புகைப்படத்தை மைத்துனரே எடுத்துள்ளார். 

வியாழக்கிழமை பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படம் வைரலாகி விட்டது. 45,000 பேர் ஷேர் செய்துள்ளனர். 14,000க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.

பலரும் புதிய முயற்சியினை எடுத்த கணவரை பாராட்டியுள்ளனர். 

“அவர் என்னை அழகான செயல் மூலம் என்னை மகிழ்வித்துவிட்டார்” என்று யுஎஸ்ஏ டுடே பத்திரிகையில் தெரிவித்துள்ளார். 

Click for more trending news


.