‘பாஜக வாக்களர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பர்!’- அசாம் விவகாரத்தில் மம்தா

அசாம் மாநிலத்தில் குடியுரிமை இறுதி வரைவு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது

‘பாஜக வாக்களர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பர்!’- அசாம் விவகாரத்தில் மம்தா
New Delhi:

அசாம் மாநிலத்தில் குடியுரிமை இறுதி வரைவு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று மீண்டும் அது குறித்து பேசியுள்ளார்.

இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. அவர்கள் தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கவில்லை என்றால், மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவர் என்று தெரிகிறது. அசாமில் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் தேசிய குடிமக்கள் பதிவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்க தேசத்திலிருந்து வந்து தங்கியுள்ள முஸ்லிம் அகதிகளை குறிவைக்கும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகறிது. 

இது குறித்து முன்னர் கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, ’40 லட்சம் மக்கள் எங்கே போவார்கள். பா.ஜ.க மக்களை பிரிக்கும் சதியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை மக்கள் போரை உருவாக்கி, ரத்த களரியாக்க போகிறது’ என எச்சரித்திருந்தார். இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது.

அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, ‘அரசியல் கட்சிகள் கூறும் கருத்துக்களை கேட்டு அதிர்ச்சையடைந்தேன். இந்தியர்களின் உரிமை குறித்து எதிர்கட்சிகளுக்கு அக்கறை இருக்கிறதா என்று தெரியவில்லை. போர் சூழல் உருவாகும் என்று கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்க நினைக்கின்றார் மம்தா. வாக்கு வங்கியை பெற இப்படி பேசுகிறார். இந்திய மக்களின் உரிமையை காக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இந்நிலையில் இன்று மீண்டு அசாம் விவகாரம் குறித்து பேசியுள்ள மம்தா, ‘சுதந்திரத்துக்கு பின்னர் பாகிஸ்தானிலிருந்து நிறைய பேர் இந்தியாவுக்கு வந்தனர். அதைப் போலத்தான் நேபாளத்திலும். மாநில அரசுக்கு எல்லைக்கோடு ஒரு பிரச்னை இல்லை. மத்திய அரசுக்குத்தான் அது பிரச்னையாக இருக்கிறது. இப்போது எடுத்திருக்கும் பட்டியலில், யாரெல்லாம் பாஜக வாக்களர்களோ அவர்களெல்லாம் லிஸ்ட்டில் இருப்பர். மற்றவர்களை எல்லாம் வங்க தேசத்தினர் என்ற பெயரில் மத்திய அரசு ஒதுக்கிவிடுமோ?’ என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 
 

More News