This Article is From Dec 08, 2018

மேகதாது விவகாரம்: வைரமுத்து பரபரப்பு கருத்து!

கவிஞர் வைரமுத்து, ‘மேகதாது விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக கருத வேண்டும்’ என்று கூறியுள்ளார்

மேகதாது விவகாரம்: வைரமுத்து பரபரப்பு கருத்து!

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசும், எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் தமிழக சட்டப்பேரவைக் கூட்டப்பட்டு, தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் கவிஞர் வைரமுத்து, ‘மேகதாது விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக கருத வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, ‘மேகதாது விஷயம் என்பது இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாக கருதக் கூடாது. அதை சர்வதேசப் பிரச்னையாக கருத வேண்டும். அதை ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், ஒரு நதி எங்கு உற்பத்தியாகிறதோ, அதைவிட எங்கு சென்று பாசனப் பரப்பில் சேர்கிறதோ, அந்தப் பரப்பிற்கு தான் உரிமை அதிகும். அதை கர்நாடகா பின் பற்றுகிறதா என்பதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்.

வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, நாங்கள் ஏற்கெனவே காய்ந்தும், ஓய்ந்தும், சாய்ந்தும் கிடக்கிறோம். இந்த நேரத்தில் எங்கள் நதி தடுக்கப்பட்டால், அது எங்கள் வாழ்க்கையை மட்டுமல்லா, எதிர்காலத்தையே சிதைந்துவிடும் என்று தமிழர்கள் அஞ்சுகிறார்கள். அந்த அச்சத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

.