This Article is From Aug 17, 2020

மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும்: அமைச்சர்கள் கோரிக்கை!

தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பைத் தேடி சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. இது மக்களின் வேண்டுகோள். காலத்தின் கட்டாயம்.

மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும்: அமைச்சர்கள் கோரிக்கை!

மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும்: அமைச்சர்கள் கோரிக்கை!

மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும் என அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளன். 

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, இந்த நான்காண்டுகளில் மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வரும், துணைமுதல்வரும் வழங்கி உள்ளனர்.

தென் மாவட்ட மக்களின் நியாயமான நீண்ட நாள் கனவான திட்டம் சென்னைக்கு அடுத்து மதுரையை தமிழ்நாட்டில் 2வது தலைநகரமாகக் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.

சென்னையில் 1 கோடி மக்கள் தொகை இருப்பதால், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது. தொழில் முதலீடுகளும் வந்துள்ளன. மதுரையை 2வது தலைநகரமாக மாறினால் தலைநகர் அந்தஸ்து கிடைக்கும். இழந்து போன தொழில்கள் மீண்டும் வரும். முதலீடுகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். 

தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பைத் தேடி சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. இது மக்களின் வேண்டுகோள். காலத்தின் கட்டாயம். சென்னையில் உள்ளது போன்று அரசுத் துறைகள் இங்கு அமைவதற்கு கட்டமைப்புக்காக இடம் தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார். 

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, நிச்சயமாக மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும். அரசியல் தளத்தில் மதுரையே முதன்மையானது. 

தொழில்களைப் பெருக்க வேண்டும் என்பதற்காகவே மதுரையைத் தலைநகராக்க வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஒரு சில மாநிலத்திற்கு இரண்டு தலைநகர்கள் உள்ளன என்று அவர் கூறினார். 

.