This Article is From Nov 12, 2019

காங்., - தேசியவாத காங். இடையே தொடங்கியது முட்டல் மோதல்! விளாசும் அஜித் பவார்!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

காங்., - தேசியவாத காங். இடையே தொடங்கியது முட்டல் மோதல்! விளாசும் அஜித் பவார்!!

காங்கிரஸ் அதன் முடிவை எடுக்க நேரம் எடுத்துக்கொள்கிறது

Mumbai:

மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத ஆட்சியை அமைக்க சிவசேனாவை ஆதரிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் தாமதத்திற்கு கட்சியை குறை கூறுவதை நிறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது, அஜித் பவாரின் மாமா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

இன்று காலை அதன் முக்கிய தலைவர்களை மும்பைக்கு அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது, பின்னர், சரத்பவாரை டெல்லி வந்து சோனியா காந்தியுடன் ஆலோசனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, கட்சி எம்எல்ஏக்களுடனான சந்திப்பை காரணம் காட்டி சரத்பவார் சோனியாவுடனான சந்திப்பிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின்னர் இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். 

முன்னதாக, காங்கிரஸின் உயர்மட்ட தலைவர் அகமது படேலும் சரத்பவாரிடம் ஆட்சி அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கருத்திய

நேற்றைய தினம் சிவசேனாவுக்கு ஆளுநர் விதித்து கெடுவுக்குள் அக்கட்சியால் ஆட்சி அமைப்பதற்கு தங்களுக்கு போதிய பலம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைக்க முடியவில்லை. 

இதைத்தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான பலம் இருப்பதை நிரூபிக்க தங்களுக்கு மேலும், 48 மணி நேரம் அவகாசம் கேட்ட சிவசேனாவுக்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர், 3வது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவார் கூறும்போது, நாங்கள் (தேசியவாத காங்கிரஸ்) அவர்களின் (காங்கிரஸ்) கட்சியின் கடிதத்திற்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். எனினும், மாலை வரை எந்த கடிதமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எந்த முடிவாக இருந்தாலும், அதில் நிலையான தன்மை வேண்டும் என்று அவர் கூறினார். 

மேலும், காலை 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை காத்திருந்தோம், சரத்பவாரும் அவர்களது கடிதத்திற்காக காத்திருந்தார். சிவசேனா தங்களது கடிதத்தை மாலை 7.30மணிக்கு கெடு முடிவடைவதற்குள் ஒப்படைக்க வேண்டும். காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காமல், நாங்கள் எப்படி அளிக்க முடியும் என்று அவர் கூறினார். 

நாங்களும், காங்கிரசும் ஒன்றாக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டோம். அதனால், எந்த முடிவுகளையும் ஒன்றாக தான் எடுக்க முடியும். காங்கிரஸ் அதன் முடிவை எடுக்க நேரம் எடுத்துக்கொள்கிறது என்றார்.

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சி
அமைக்க மேலும், 48 மணி நேரம் அவகாசம் கேட்ட சிவசேனாவுக்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் 3வது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத
காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 வரை கெடுவும் விதித்துள்ளார். 
 

.