This Article is From Mar 11, 2020

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறித்த முழு விவரம்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் 21 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறித்த முழு விவரம்

மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை விட்டுவெளியேறிய பின்னர் காங்கிரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்
  • ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார்
  • மத்திய பிரதேசத்தில் கடந்த 15 மாதங்களாக கமல்நாத் அரசு செயல்பட்டு வருகிறது
Bhopal:

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தொடர்வதற்கு போதிய பலம் காங்கிரசுக்கு இல்லையென்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு ஆட்சியைத் தக்க வைப்பதற்கான வாய்ப்புகளைக் காங்கிரஸ் இழந்து வருகிறது.

கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா இன்று கட்சியிலிருந்து வெளியேறினார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் பெங்களூருவில் உள்ளனர். அவர்கள் உள்பட மொத்தம் 21 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காங்கிரஸிலிருந்து வெளியேறிய சிந்தியா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் அவர் பாஜகவில் இணைவார் என்றும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு போதிய உறுப்பினர் பலத்தைக் காங்கிரஸ் இழந்து வருகிறது. இந்த எம்எல்ஏக்கள் கணக்கீட்டைச் சுருக்கமாக பார்க்கலாம்...

* மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் 230 உறுப்பினர்கள் உள்ளனர்.


* தற்போது அவையின் எண்ணிக்கை 227 ஆக உள்ளது (2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்)


* 120 எம்எல்ஏக்கள் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.


* மெஜாரிட்டிக்கு 116 உறுப்பினர்கள் பலம் தேவை. 


* கமல்நாத்துக்கு ஆதரவு அளிப்பவர்களில் 114 காங்கிரஸ் கட்சியையும், 6 பேர் கூட்டணிக் கட்சியையும் சேர்ந்தவர்கள். 


* 21 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டதால், 206 பேர் கொண்ட அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 எம்எல்ஏக்களின் பலம் தேவை.


* இதன் அடிப்படையில் காங்கிரசுக்கு 99 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 107 உறுப்பினர்களும் உள்ளனர்.


* இதனால் காங்கிரஸ் அரசு நிலைக்க வாய்ப்புகள் குறைந்துள்ளன. 

.