
Madhya Pradesh: 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை!
மத்திய பிரதேசத்தில் 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மூத்த போலீஸ் அதிகாரி அளித்த பேட்டியில், மே.28 - 29 நள்ளிரவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 29ம் தேதி காலையில் 4 வயது குழந்தை கிணற்றுக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த குழந்தையின் பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவத்தை மெதுவாக விசாரித்து வந்த அந்த பகுதிக்குட்ட காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மூத்த போலீஸ் அதிகாரிகள், துணை காவல் ஆணையர் விவேக் ராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர்.
தொடர்ந்து, அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விவரங்களை தெரிவித்தால், ரூ.10,000 சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
With inputs from ANI