This Article is From Jul 18, 2018

ஊழியர்கள் தாமதப்படுத்தியதால் டோல்கேட்டை உடைத்துச் சென்ற கேரள எம் எல் ஏ

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த எம் எல் ஏ காரில் இருந்து இறங்கி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

Thrissur, Kerala:

டோல்கேட்டில்  ஊழியர்கள் வாகன சோதனையின்போது தாமதப்படுத்தியதால் கேரள மாநிலத்தின் பூஞ்சாறு தொகுதி எம் எல் ஏ பிசி ஜார்ஜ் தனது காரில் டோல்கேட்டை உடைத்துவிட்டு காரில் ஏறிச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள டோல்கேட்டில், பூஞ்சாறு தொகுதி எம் எல் ஏ பிசி ஜார்ஜ் தனது உதவியாளர்களுடன் காரில் வந்தார். அப்போது, டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த எம் எல் ஏ காரில் இருந்து இறங்கி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து தள்ளிய எம் எல் ஏ ஜார்ஜ், தனது காரில் ஏறிச் சென்றார். சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இதுகுறித்து ஜார்ஜ் கூறுகையில், எம் எல் ஏ கார்டு இருந்தும் என்னை அந்த குறிப்பிட்ட பணியாளர் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனக்கு ரயிலுக்கு நேரமானதால், அவ்வாறு நடந்துகொள்ள வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரு தரப்பினரும் போலீஸாரிடம் புகார் கொடுக்காததால், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.