This Article is From May 04, 2019

'பேட்டரி தீர்ந்து போனால் டார்ச் லைட் எரியாது' : கமலை கலாய்த்த தமிழிசை!!

புதிதாக அரசியல் கட்சியை ஆரம்பித்தவர்கள் சலசலப்பை ஏற்படுத்துவார்கள். பின்பு ஓய்ந்து விடுவார்கள் என்று தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

'பேட்டரி தீர்ந்து போனால் டார்ச் லைட் எரியாது' : கமலை கலாய்த்த தமிழிசை!!

மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி - தமிழிசை இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

பேட்டரி தீர்ந்து விட்டால் டார்ச் லைட் எரியாது என்று நடிகர் கமல்ஹாசனையும், அவரது மக்கள் நீதி மய்யத்தையும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கிண்டல் செய்துள்ளார். 

மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடுகிறார். இதனால் தமிழக அரசியலில் நட்சத்திர தொகுதியாக தூத்துக்குடி மாறியுள்ளது. 

மக்களவை தேர்தலில் கமல் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தனித்து போட்டியிட்டன. இதில் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட், அமமுகவுக்கு பரிசு பெட்டகம், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை, தேர்தல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது- 

பேட்டரி பவராக இருக்கும்போது டார்ச் லைட் (கமல் கட்சியின் சின்னம்) பவர் ஃபுல்லாகத்தான் எரியும். கொஞ்சம் கொஞ்சமாக பேட்டரி குறையும்போது, டார்ச் லைட்டும் மங்கலாகி, பேட்டரி தீர்ந்து போனால் டார்ச் லைட் எரியாமல் போகும். 

இதேபோன்றுதான், சீமான்,  தினரகன், கமல்ஹாசன் போன்றோர் இப்போது சலசலப்பை ஏற்படுத்துவார்கள். பின்னர் சலித்துப்போய் உட்கார்ந்து விடுவார்கள். 
எதிர்க்கட்சியாக இருப்பதற்கு மட்டும்தான் ஸ்டாலினுக்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். அதனால் ஸ்டாலின் அவசரப்படத் தேவையில்லை. 
இவ்வாறு அவர் கூறினார். 

.