This Article is From Mar 27, 2019

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம்தேதி பொது விடுமுறை!

வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-யை பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம்தேதி பொது விடுமுறை!

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரித்த தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம்தேதியை பொது விடுறையாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதற்கான முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க செய்வதற்காக தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுதொடர்பாக பிரபலங்கள் பலர் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ம்தேதியை தமிழக அரசு விடுமுறையாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

.