Read in English
This Article is From Mar 23, 2019

மக்களவை தேர்தலில் 2 பேரன்களுடன் களத்தில் இறங்குகிறார் தேவகவுடா!

கர்நாடகாவில் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Edited by

தும்குரு தொகுதியில் தேவகவுடா போட்டியிடுகிறார்.

Bengaluru:

மக்களவை தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இதுதொடர்பாக பல செய்திகள் வெளியான நிலையில், அவர் போட்டியிடுவார் என்று மதசார்பற்ற ஜனதா தள கட்சி அறிவித்திருக்கிறது. அவருடன் 2 பேரன்களும் இந்த தேர்தலை சந்திக்கின்றனர். 

கர்நாடகாவில் மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மத சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 

கடந்த வாரம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின்போது தெற்கு கர்நாடகாவில் இருக்கும் தனது ஹாசன் தொகுதியை பேரன் பிரஜ்வால் ரேவன்னாவுக்கு விட்டுக் கொடுத்தார். 

Advertisement

மாண்டியா தொகுதியும் மதசார்பற்ற ஜனதா தளம் வசம் உள்ளது. அதனையும் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமிக்கு போட்டியிட அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவ கவுடா போட்டியிடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. 

இந்த நிலையில் அவர் போட்டியிடுவார் என்று மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்திருக்கிறது. கர்நாடகாவில் 2 கட்டங்களாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. 
 

Advertisement
Advertisement