மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நடிகை ஊர்மிளா போட்டி!!

நேற்று முன்தினம்தான் நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அடுத்த 2 நாட்களில் அவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நடிகை ஊர்மிளா போட்டி!!

ராகுல் காந்தி உடனான சந்திப்புக்கு பின்னர் காங்கிரசில் சேர்ந்தார் ஊர்மிளா.

ஹைலைட்ஸ்

  • கோகுல்நாத் ஷெட்டி எதிர்த்து ஊர்மிளா போட்டியிடுகிறார்
  • மும்பை வடக்கு தொகுதியில் நடிகை ஊர்மிளா போட்டி
  • கடந்த புதன் கிழமையன்று நடிகை ஊர்மிளா காங்கிரசில் சேர்ந்தார்
Mumbai:

அரசியலுக்கு திரும்பியுள்ள பிரபல நடிக ஊர்மிளா மடோன்ட்கர் மும்பை தெற்கு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ராகுல் காந்தி உடனான சந்திப்புக்கு பின்னர் ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

அடுத்த 2 நாட்களில் அவரை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மும்பை காங்கிரசின் தலைவராக இருக்கும் மிலிந்த் தியோரா ஊர்மிளாவின் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். தற்போது மும்பை வடக்கு மக்களவை தொகுதி பாஜக வசம் உள்ளது.

இங்கு பாஜக தரப்பில் கோகுல்நாத் ஷெட்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஊர்மிளா களத்தில் நிறத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து கோகுல் ஷெட்டி என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், ''மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைவது உறுதியாகி விட்டது. அதனை ஊர்மிளாவின் தலையில் சுமத்தப் பார்க்கிறார்கள். அவர் இந்த தேர்தலில் தோற்கத்தான் போகிறார். மீண்டும் அவர் அரசியலை நினைத்துப்  பார்க்க மாட்டார்'' என்றார்.

oheinvo

ஊர்மிளா குழந்தை நட்சத்திரமாக கடந்த 1983-ல் மசூம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அவர் நடித்து 1995-ல் வெளிவந்த ரங்கீலா திரைப்படம் நல்ல வசூலையும், பெயரையும் பெற்றுத்தந்தது.

சினிமாத்துறை மற்றும் அரசியல் குறித்து பேசிய ஊர்மிளா, ''சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வரும்போது, பிரபலம் காரணமாக அவர்கள் வாக்காளர்களை ஈர்ப்பார்கள் என்ற பேச்சு உள்ளது. நான் அரசியலுக்கு வரும்போது இதுபோன்ற எண்ணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

மும்பையில் 6 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 29 முதல் தேர்தல் நடைபெறுகிறது.