This Article is From Dec 11, 2018

''இறுதி முடிவு வரும்வரை காத்திருப்போம்'' - நிதானம் காட்டும் சோனியா

கட்சிச் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும், சோனியாவும், ராகுல் காந்தியும் நிதானம் காட்டி வருகின்றனர்.

''இறுதி முடிவு வரும்வரை காத்திருப்போம்'' - நிதானம் காட்டும் சோனியா
New Delhi:

5 மாநில தேர்தல் முடிவுகளில் தற்போது வரை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. இதையொட்டி காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், சோனியா காந்திக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சோனியா தரப்பில் இருந்து ''இறுதி முடிவு வெளிவரும் வரை காத்திருப்போம்''என்ற பதில்தான் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புதான் தேர்தல் முடிவா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சோனியா இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்.

தேர்தல் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளார் என்ற பாராட்டு மகன் ராகுல் காந்திக்கு சோனியாவிடம் இருந்து கிடைத்துள்ளது. சமீபத்தில் தேசிய அளவில் எழுந்து வரும் அரசியல் மாற்றங்கள் காங்கிரசுக்கு பலத்தை அளித்து வருகிறது. தெலுங்கு தேச கட்சியின் ஆதரவு,மோடி அரசில் இருந்து பீகாரின் சக்திமிக்க உபேந்திர குஷ்வாஹா விலகல் உள்ளிட்டவை இதற்கு உதாரணங்கள்.

மிசோரம், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மற்ற 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

.