This Article is From Oct 26, 2018

இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே!

கூட்டணி கட்சிகள் ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதை தொடர்ந்து, இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் பிரதமராக பதவியேற்றார் ராஜபக்சே!

அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்தார்

Colombo, Sri Lanka:

இலங்கை பிரதமராக இருந்து வந்த ரணில் விக்கிரம சிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன முன்னிலையில் இந்த பதவியேற்பு நடைபெற்றது.

முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவியேற்கும் காட்சிகளை ஊடகங்களும் தொலைக்காட்சி சேனல்களும் வெளியிட்டன

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. பிரதமர் ரணில் விக்கிரம சிங்கேவிற்கு எதிரான சிறிசேன ஆதரவாளர்கள் சிலர் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றது.

இதையடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த பதவி பறிப்பு குறித்து ரணில் விக்கிரம சிங்கே மற்றும் அவரது ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தும் இதுவரை எந்த கருத்தும் வரவில்லை.

.