TN Weather Update: லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகத்தில் (Tamilnadu) கனமழை (Heavy rain) பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
TN Weather Update: மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த தீவிர புயலான ‘மகா' (Maha Cyclone), வடக்கு-வடமேற்கு திசை நோக்கி சுமார் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மகா புயல், மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும். இதனால் லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகத்தில் (Tamilnadu) கனமழை (Heavy rain) பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம், மேலும் தகவல் தெரிவிக்கையில், ‘கேரளா, தென் தமிழகம், கர்நாடக கடற்கரைப் பகுதிகள், ராயலசீமா, ஆந்திர கடற்கரைப் பகுதிகள், தெலங்கானா உள்ளிட்ட இடங்களில், மகா புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,' எனக் கூறியுள்ளது.
கியார் புயல் பற்றி, வானிலை மையம், ‘மேற்கு-மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் கியார் புயல், தெற்கு-தென்மேற்கு திசை நோக்கி அடுத்த சில மணி நேரங்களில் நகரும். தொடர்ந்து மேற்கு மத்திய அரபிக் கடல் நோக்கி இந்தப் புயல் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது அடுத்த 6 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறி, அதற்கடுத்த 6 மணி நேரத்தில் தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதனால் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது,' என்று விவரிக்கப்பட்டுள்ளது.