This Article is From Feb 13, 2019

கும்ப மேளாவில் புனித நீராடிய பாஜக தலைவர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத்

கும்பமேளாக கடந்த ஜனவரி 15-ம்தேதி தொடங்கியது. மார்ச் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

கும்ப மேளாவில் புனித நீராடிய பாஜக தலைவர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத்

கும்ப மேளாவில் புனித நீராடும் அமித் ஷா, யோகி ஆதித்யநாத்

Prayagraj:

உத்தர பிரதேசத்தில் விமர்சையாக நடைபெற்று வரும் கும்பமேளாவில் பாஜக தலைவர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் புனித நீராடினர்.

உத்தர பிரதேசத்தில் கும்பமேளா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில் பாஜக தலைவர் அமித் ஷா இன்று புனித நீராடினார். 

அவருடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கும்பமேளாக கடந்த ஜனவரி 15-ம்தேதி தொடங்கியது. மார்ச் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

கடந்த சில வாரங்களாக முக்கிய அரசியல் தலைவர்கள் கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர். ஸ்மிருதி இரானி, யோகி ஆதித்யநாத் மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கும்ப மேளா நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளனர். 

மார்ச் 4-ம்தேதிக்குள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கும்மேளாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

.