This Article is From Oct 21, 2018

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களால், 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

வட காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் கரால்ஹார் பகுதியில் தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.

2 அல்லது 3 தீவிரவாதிகள் வீட்டிற்குள் மறைந்திருக்கலாம் என தெரியவந்தது.

Srinagar:

ஜம்மு&காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த என்கவுண்டர் தளத்தில், கண்டுபிடிக்கப்படாத வெடிகுண்டு வெடித்ததில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்கவுண்டர் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என்ற போலீசாரின் உத்தரவை பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உளவுத்துறை அளித்த தகவலின் பேரிலே தீவிரவாதிகள் லாரோ பகுதியில் ஒரு வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்தே செக்கயூரிட்டி எஜன்ஸிகளின் துணையுடன் என்கவுண்டர் மேற்கொள்ளப்பட்டது.

Civilians visited encounter site immediately after operation inspite of request not to visit as thorough search wason for explosives.They didn't listened and thus visited the spot.Some explosive substance went off resulting in injuries to https://t.co/GSCo1Micl7 civilian died.

- J&K Police (@JmuKmrPolice) October 21, 2018

 

Extremely saddened by the news of kulgam incident , where civilians were once again caught in the cross fire of violence , thus adding fuel to the already volatile situation . All words of condemnation ,condolence sound very hollow at this tragedy .

- Mehbooba Mufti (@MehboobaMufti) October 21, 2018

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப்பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டது. தேடுதலின் போது, தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தனர். வட காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் கரால்ஹார் பகுதியில் தீவிரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 2 நாட்கள் கழித்து 2 தீவிரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து இரண்டு ஏகே-47 ரக துப்பாக்கிகள், 2 சீன துப்பாக்கிகள் உள்ளிட்ட சில ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

.