This Article is From Feb 07, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு!

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதியாக சந்தேகிக்கப்பட்ட 72 பேரில் 67 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து மாநில பேரிடர் தளர்வு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு: கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் தளர்வு!

கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

Thiruvananthapuram:

கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த திங்கள்கிழமையன்று அறிவிக்கப்பட்ட மாநில பேரிடர் இன்று தளர்வு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட அந்த 3 பேரும் வுஹான் பகுதியில் இருந்து திரும்பியவர்கள் என்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதியாக சந்தேகிக்கப்பட்ட 72 பேரில் 67 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து மாநில பேரிடர் தளர்வு செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறும்போது, பரிசோதனை முடிவுகள் நிலைமை மேம்பட்டுள்ளதைக் காட்டுகின்றன, இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். முதலில் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஐந்து பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், இரண்டாவது உறுதிப்படுத்தப்பட்ட நபர், ஒரு நபருடனும், மூன்றாவது உறுதிப்படுத்தப்பட்டவர் இரண்டு நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளளது. 

தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் சோதனை செய்ததில் யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது என்று கூறிய அவர், கொரோனாவை தடுப்பதற்கான எச்சரிக்கை வழிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அங்குள்ள வுஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் கேரள மாணவி ஒருவரையும் இந்த வைரஸ் தாக்கியது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இதேபோன்று வுஹான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மற்றொரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனிடையே, கேரளாவில் 3வது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. காசர்கோடு பகுதியை சேர்ந்த அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

.